இந்த கர்ப்பத்துக்கு காரணம் கணவர் தான்.. ஆனால், மனைவி கூறிய பகீர் தகவல்.. குலை நடுங்க வைக்கும் கொடூரம்
டெல்லி: மத்திய டெல்லியின் ராம் நகர் பகுதியில் கள்ளக்காதல் தொடர்பான விவகாரம் கொடூர இரட்டைக் கொலையாக மாறிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது கர்ப்பிணி இளம்பெண் ஒருவர் தனது காதலனால் பொதுவெளியில் கத்தியால் பலமுறை குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இதைத் தடுக்க முயன்ற அவரது கணவர், கத்தியைப் பறித்து காதலனை சரமாரியாக குத்தி கொன்றார். இச்சம்பவத்தில் இருவர் உயிரிழந்த நிலையில், கணவர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கொல்லப்பட்ட இளம்பெண்ணின் பெயர் ஷாலினி (வயது 22). இவர் இல்லத்தரசி மற்றும் இரு பெண் குழந்தைகளின் தாய். அவரது கணவர் ஆகாஷ் (வயது 23), இ-ரிக்ஷா ஓட்டுநர். கொல்லப்பட்ட காதலன் ஆசு எனப்படும் ஷைலேந்திரா (வயது 34), உள்ளூர் ரவுடி, பல வழக்குகள் நிலுவையில் இருக்கும் குற்றவாளி என போலீசார் தெரிவித்துள்ளனர். போலீசார் வெளியிட்ட தகவலின்படி, ஷாலினிக்கும் ஆசுவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஷாலினி - ஆகாஷ் தம்பதியரின் உறவு சிக்கலான நிலைக்கு சென்றது. அப்போது ஷாலினி கணவர் ஆகாஷை பிரிந்து வாழ்ந்து வந்தார். அந்த நேரத்தில், ஆசுவுடன் த...