கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி இப்போ என்ன பண்றாங்கன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க!
தமிழ் சினிமாவில் தனித்துவமான பாத்திரங்களால் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கவர்ச்சி நடிகை புவனேஸ்வரி. சமீப காலமாக மீடியா வெளிச்சம் படமால் காணமல் போன இவர் தற்போது என்ன செய்கிறார் என்று பார்க்கலாம். சமீபத்தில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அவர் தனது ஆன்மீக பயணத்தையும், சினிமா அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்த புவனேஸ்வரி, தற்போது திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் ஆன்மீக பாதையில் பயணிக்கிறார். அவரது பேட்டி ரசிகர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. புவனேஸ்வரி தனது ஆன்மீக பயணத்தைப் பற்றி பேசுகையில், கனவில் தோன்றிய காளிதேவியின் அழைப்பே இதற்கு காரணம் என்கிறார். “நடிப்பில் இருந்தபோதே ஆன்மீகத்தில் ஈடுபாடு இருந்தது. ஒரு கனவில் காளிதேவி தோன்றி ஆன்மீக பாதைக்கு வருமாறு அழைத்தார். அவரைத் தேடி பல வருடங்களாக அலைந்து, இறுதியில் தாராபுரத்தில் கண்டுபிடித்தேன்,” என்று உருக்கமாக கூறினார். தாராபுரத்தில் உள்ள காளி கோயில், பஞ்ச பாண்டவர்கள் வழிபட்ட புராதன ஸ்தலமாகும். முனிவர் அகஸ்தியருக்கும் காளிதேவிக்கும் இடையே நடந்த...