Posts

Showing posts with the label family isolation

ரூபாய் 45 கோடி லாட்டரி வென்றவரின் தற்போதைய பரிதாப நிலை!

Image
கேரளாவைச் சேர்ந்த மனோஜ் குமார் என்ற நபர், சுமார் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு துபாய் லாட்டரி சீட்டு வாங்கி அதிர்ஷ்டவசமாக 40 கோடி ரூபாய் பரிசு வென்றார். வரி, கமிஷன் உள்ளிட்ட அனைத்து கழிவுகளுக்குப் பிறகும் அவரது கைக்கு சுமார் 32 கோடி ரூபாய் கிடைத்தது. ஆனால் இந்தப் பணம் அவரது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுவதற்கு முன்பே, வங்கி மேலாளர் தொடர்பு கொண்டு டெபாசிட் செய்யுமாறு கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலர் உதவி கேட்டு தொடர்பு கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த திடீர் தொந்தரவுகளைத் தாங்க முடியாமல், மனோஜ் தனது மனைவி, இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஒரு ஆண் குழந்தையுடன் வேறொரு வீட்டிற்கு இரகசியமாக இடம் பெயர்ந்தார். தனது கைபேசி எண்ணையும் முற்றிலும் மாற்றிக்கொண்டார். இருப்பினும், அவரது உறவினர்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டு, தொடர்ந்து பல்வேறு வகைகளில் பண உதவி கேட்டு நச்சரித்து வந்தனர். “50 லட்சம் மட்டும் கொடு”, “ஒரு கோடி மட்டும் கொடு” என்று மீண்டும் மீண்டும் கோரிக்கை வைத்ததாக அவர் கூறுகிறார். பணத்தை ஒரு ரூபாய் கூட வீண் செலவு செய்யாமல்... மனோஜ் பணத்தைச் செலவு செய்வதில்...