Posts

Showing posts with the label King Kong Shankar

"உனக்கெல்லாம் கல்யாணம் ஆகுமாடானு கேப்பாங்க..." மனவலியுடன் போட்டி கொடுத்த நடிகர் கிங் காங்!!

Image
பிரபல நகைச்சுவை நடிகர் கிங் காங், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 1990 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான "அதிசய பிரவி" என்ற படத்தில் நடித்து பிரபலமானார். கிங் காங் அஜித் மற்றும் விஜய் ஆகியோரின் பல படங்களிலும் நடித்துள்ளார்.   இவர் வடிவேலுவுடன் நடித்த படங்கள் மற்றும் அதில் இடம் பெற்ற காமெடி காட்சிகள் அனைத்தும் பெரிய வெற்றி பெற்றன. இந்நிலையில், நடிகர் கிங்காங் மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய விருது பெற்றது குறித்து சமீபத்தில் யூட்யூப் வீடியோ ஒன்றில் பேட்டியளித்தார்.    தான் விருது பெற்றதற்காக நடிகர் ரஜினிகாந்திடம் வாழ்த்து பெற வேண்டும் என முயற்சி செய்தேன். ஆனால், தற்பொழுது வரை வாழ்த்து பெற முடியவில்லை என்ற வருத்தத்தைப் பதிவு செய்திருந்தார். சமூக வலைதளத்தில் இந்தப் பதிவை பெருமளவில் ரஜினி ரசிகர்கள் பகிர்ந்தனர்.    சுமார் 10 ஆண்டுகள் கழித்து இன்று நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கிங்காங் அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். "பத்து வருஷத்துக்கு முன்னாடி உங்களை பாத்தாது. ஆனால் இந்த இன்ஃபர்மேஷன் எனக்கு வந்து சேரல ரியலி ஐ அம் சாரி.. மன்னிச்சுடுங்க...