நூடுல்ஸ் மாஸ்டருடன் உல்லாசம்.. அளவெடுக்க அழைப்பு.. சடலமான கணவன்.. வசமாக சிக்கிய நிஷா..
தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரத்தில் கணவனை மனைவியே தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து திட்டமிட்டு கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை நடத்திய போலீசார், கொலை வழக்கில் கள்ளக்காதலன் மற்றும் அவரது காதலியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தென்காசியில் இருந்து திருமலைக்கோவில் செல்லும் பிரதான சாலை அருகே உள்ள விவசாயத் தோட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆண் ஒருவர் தலையில் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார். அந்த வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இலத்தூர் போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, உயிரிழந்த நபர் யார், அவர் எந்த ஊரைச் சேர்ந்தவர், எதற்காக அந்த தோட்டத்திற்கு வந்தார் என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். ஒரு வாரம...