DONT GOOGLE HER PHOTO - தப்பி தவறி கூட பாத்துடாதிங்க..
ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள தானி லட்ஷ்மன் என்ற சிறிய கிராமம். ஆகஸ்ட் 11, 2025, மாலை 6:15 மணி. அந்த அமைதியான கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில், 44 வயதான சஞ்சய் சிங் ஒரு நாற்காலியில் பதற்றத்துடன் உட்கார்ந்திருக்கிறார். கண்களை மூடியபடி, தலையில் கை வைத்து, மனதில் பயம் பரவியிருக்கிறது. அவரது 18 வயது மகள் மனிஷா, “அப்பா, வேலைக்குப் போயிட்டு வரேன்,” என்று காலையில் சொல்லிவிட்டு வீட்டை விட்டுக் கிளம்பினாள். ஆனால், மாலை 5 மணி பஸ்ஸில் வீடு திரும்ப வேண்டியவள், 6:30 ஆகியும் வரவில்லை. “என்ன ஆச்சு? எங்கே போனாள்?” என்று சஞ்சய் மனம் பதறுகிறது. திடீரென, அவரது செல்போன் ஒலிக்கிறது. திரையில் மனிஷாவின் பெயர் தெரிகிறது. ஒரு கணம் நிம்மதி பிறந்தாலும், அவர் அழைப்பை எடுத்து, “மனிஷா, எங்க இருக்கே? ஏன் இன்னும் வரல?” என்று கேட்கிறார். ஆனால், அந்தப் பக்கம் எந்தப் பதிலும் இல்லை. மயான அமைதி. ஒரு மெல்லிய மூச்சு சத்தம் மட்டும் கேட்கிறது, பயத்துடன் கலந்தது போல. பத்து வினாடிகளில் அழைப்பு துண்டிக்கப்படுகிறது. சஞ்சய் மீண்டும் மீண்டும் அழைக்கிறார், ஆனால் போன் ‘ஸ்விட்ச் ஆஃப்’ என்று வருகிறது. அவரது மனம் பயத்தில் உறைகிறது. ...