Posts

Showing posts with the label Rameshwaram murder

நடுரோட்டில் +2 மாணவியை கதற கதற.. நடுங்கும் தமிழ்நாடு.. திடுக்கிட வைக்கும் CCTV காட்சிகள்..

Image
ராமநாதபுரம், நவம்பர் 19: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மீனவர் மாரியப்பன் - சுசீலா தம்பதியினரின் மூத்த மகள் ஷாலினி (வயது 17). ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 படித்து வந்த இவர், பள்ளிக்கு செல்லும் வழியில் ஒருதலை காதலித்த இளைஞரால் கத்தியால் குத்தப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.அதே பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞர் முனியராஜ் (முனிராஜ்), கடந்த சில மாதங்களாக ஷாலினியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார். பலமுறை காதலை ஏற்குமாறு வற்புறுத்தியும் ஷாலினி மறுத்து வந்தார். இது குறித்து ஷாலினி தனது தந்தை மாரியப்பனிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, மாரியப்பன் முனியராஜின் வீட்டுக்குச் சென்று எச்சரித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த முனியராஜ், நேற்று (நவம்பர் 19) காலை ஷாலினி பள்ளிக்கு செல்லும் வழியில் வழிமறித்து மீண்டும் காதலை வற்புறுத்தியுள்ளார். ஷாலினி ஏற்க மறுத்ததால், ஆத்திரமடைந்த முனியராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஷாலினியின் கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக குத...