Posts

Showing posts with the label COVID-19 management

வலி நிறைந்த வாழ்க்கை.. பீலா வெங்கடேசன் உயிரிழந்த உண்மை காரணம் என்ன? 56 வயதில் திடீர் மரணம்!

Image
சென்னை, செப்டம்பர் 25 : தமிழக சுகாதாரத் துறை முன்னாள் செயலாளர் பீலா வெங்கடேசன் (56) கடந்த புதன்கிழமை மாலை மூளை புற்றுநோயால் உயிரிழந்தார். கொரோனா தொற்றின் முதல் அலையின்போது தினமும் மாலை வேளையில் தொலைக்காட்சிகளில் தோன்றி, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய அவரது பங்களிப்பு, தமிழக மக்களின் நினைவில் என்றும் நிலைத்திருக்கும். தனது 56வது வயதில் குடும்ப வாழ்வில் ஏற்பட்ட மனமுறிவுகளையும், குணமடையாத நோயின் வலியையும் சகித்துக்கொண்டு, அமைதியாக வாழ்ந்து மறைந்த பீலா வெங்கடேசனின் உடல், கொட்டிவாக்கத்தில் உள்ள தனது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. உறவினர்கள், அதிகாரிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.தூத்துக்குடி மாவட்டம், நாசரேதருகே வாழையடி கிராமத்தைப் பூர்வீகமாகக் கொண்ட பீலா வெங்கடேசன், மறைந்த தமிழக டி.ஜி.பி. எல்.என். வெங்கடேசன் மற்றும் முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ ராணி வெங்கடேசன் தம்பதியரின் மகளாக செல்வாக்கு மிக்க குடும்பத்தில் பிறந்தார். மருத்துவப் படிப்பை முடித்து, 1997ஆம் ஆண்டு குடிமைப் பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியமர்த்தப்பட்டார். ஐ.பி.எஸ். அதிகாரி...