அதை பாத்துட்டு என் கணவர் 10 நாள் என் பக்கத்துலையே வரல.. கூச்சமின்றி கூறிய நடிகை கீர்த்தி சுரேஷ்!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ், தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். 'மகாநதி' படத்தில் சாவித்திரி வாழ்க்கையை திரையில் தீவிரமாக உயிர்ப்பித்ததற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்று வரலாற்றில் இடம்பிடித்தார். இந்தப் படம் அவருக்கு உலக அளவில் அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. திரைப்படங்களில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், தனிப்பட்ட வாழ்க்கையில் காதல் மற்றும் திருமணத்தை அழகாக சமநிலைப்படுத்தி வருபவர் கீர்த்தி. கடந்த ஆண்டு (2024 டிசம்பர்) தனது நீண்டகால காதலரான ஆண்டனி தட்டில் உடன் கோவாவில் கோலாகலமான திருமணம் நடைபெற்றது. ஹிந்து மற்றும் கிறிஸ்தவ முறைப்படி இரண்டு விதமான விழாக்களாக இந்த திருமணம் நடந்து, திரையுலக சகோதரர்கள், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் ஒரு பிரபல ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், கீர்த்தி தனது காதல் பயணத்தை உருக்கமாகப் பகிர்ந்துள்ளார். “எங்கள் காதல் Orkut நாட்களில் தொடங்கியது. நான் தான் முதலில் ஆண்டனியிடம் காதலை வெளிப்படுத்தினேன். அவர் என்னை 2010-ல் முதலில் ப்ரோபோஸ் செய்தார், 2016-ல் உறவு இன்னும...