"மூனு கல்யாணம் பண்ணியும் அடங்காத உல்லாச வெறி" கணவர் உறங்கும் போது மனைவி செய்த அசிங்கம்!
புதுக்கோட்டை மாவட்டம், குன்றாண்டார் கோவில் பகுதியைச் சேர்ந்த அறிவழகன் ஒரு ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். முதல் திருமணம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து போன நிலையில், அவர் சௌந்தர்யா என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டு இயல்பான வாழ்க்கையை நடத்தி வந்தார். ஒரு நாள், அறிவழகன் மது அருந்தி மாமிசம் உண்டுவிட்டு வீடு திரும்பினார். அப்போது அவருக்கு மாறடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக அவரது மனைவி சௌந்தர்யா உறவினர்களிடம் தெரிவித்தார். உறவினர்கள் அவரது உடலை குளிப்பாட்டி, முறையான சடங்குகளுடன் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யும் போது அறிவழகனின் கழுத்துப் பகுதியில் வரி வரியான காயங்கள் இருப்பது கவனிக்கப்பட்டது. இது சில உறவினர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், அதைப் பெரிதுபடுத்தாமல் உடல் அடக்கம் செய்யப்பட்டது. உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகும், அறிவழகனின் தாய், அண்ணன் மற்றும் தம்பி ஆகியோருக்கு அந்தக் காயங்கள் பற்றிய சந்தேகம் உறுத்தலாக இருந்தது. அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முடிவு செய்தனர். இந்தத் தகவலை அறிந்த சௌந்தர்யாவின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. உறவினர்கள் அவரது மீ...