Posts

Showing posts with the label deaths

ஒரே கல்லூரியில் 800 மாணவ, மாணவிகளுக்கு HIV உறுதி.. என்ன காரணம்? வெளியான குலைநடுங்க வைக்கும் தகவல்..

Image
திரிபுரா மாநிலத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே எய்ட்ஸ் (HIV/AIDS) தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுரா மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் (TSACS) அறிக்கையின்படி, 828 மாணவர்கள் எய்ட்ஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், இதில் 47 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பரவலுக்கு முக்கிய காரணமாக போதைப் பொருள் பயன்பாடு, குறிப்பாக ஒரே ஊசியைப் பகிர்ந்து கொண்டு போதைப் பொருளை செலுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. போதைப் பழக்கத்தால் விளைந்த விபரீதம் சமீப காலமாக திரிபுராவில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே நடத்தப்பட்ட சோதனைகளில் இந்த அதிர்ச்சிகரமான உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. மாநிலத்தில் உள்ள 220 பள்ளிகள் மற்றும் 24 கல்லூரிகளில் மாணவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக, பணக்கார குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இதில் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். பெற்றோர்கள், பெரும்பாலும் அரசு வேலையில் இருப்பவர்கள், தங்கள் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதில் கவன...