“34 வயது பெண் மரணம்..” ஒரு வாரம் கழித்து சிக்கிய பள்ளி மாணவன்! சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட்!
பெங்களூரு, ஜனவரி 12, 2026: ராமமூர்த்தி நகர் சுப்ரமண்யா லேஅவுட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வாடகைக்கு தங்கியிருந்த 34 வயது மென்பொருள் பொறியாளர் ஷர்மிளா டி.கே. (Sharmila D.K.) கடந்த ஜனவரி 3-ஆம் தேதி இரவு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக முதலில் தெரியவந்தது. ஆனால், ஒரு வார விசாரணைக்குப் பிறகு இது கொலை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதில் 18 வயது பிளஸ் டூ மாணவன் கர்னல் குறாய் (Karnal Kurai) கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் எப்படி நடந்தது? ஷர்மிளா, தக்ஷிண கன்னடா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பிரபல ஐடி நிறுவனத்தில் (சில தகவல்களின்படி Accenture) பணியாற்றி வந்தார். அவரது அறை தோழி ஊருக்கு சென்றிருந்த நிலையில், ஜனவரி 3 இரவு அவர் தனியாக வீட்டில் இருந்தார். அருகிலேயே தாயுடன் வசித்து வந்த கர்னல் குறாய் (கொடகு மாவட்டம் விராஜ்பேட்டைச் சேர்ந்தவர், பிளஸ் டூ படிக்கும் பள்ளி மாணவன்), ஷர்மிளா தனியாக இருப்பதை அறிந்து, இரவு 9 மணி அளவில் ஜன்னல் வழியாக வீட்டுக்குள் நுழைந்துள்ளார். அவர் ஷர்மிளாவிடம் தன்னுடன் உல்லாசமாக இருக்குமாறு கேட்டுள்ளார். ஆனால்,ஷர்மிளா இதை கடுமையாக மறுத்து, அவரை வெளியேறுமாறு எச்சர...