"3 எழுத்து இட்லி நடிகை.. குடும்பத்தை அழிக்க வந்த.." கைநீட்டி காறித்துப்பிய நடிகர் ரவி மோகன்!
சென்னை : நடிகர் ரவிமோகன் தனது மனைவி ஆர்த்தி மற்றும் அவரது குடும்பத்தினர் தன்னை பிளாக்மெயில் செய்து அடிமையாக வைத்திருந்ததாகவும், தனது குடும்பத்தை கெடுத்தது “மூன்று எழுத்து இட்லி நடிகை” தான் என்றும் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை ஆழ்வார்பேட்டையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரவிமோகன், தனது தோழி கெனிஷா சென்னையை விட்டு வெளியேறுவதாக அறிவித்த நிலையில் கண்ணீர் மல்க பேசினார். “தேவையில்லாத அவமானங்களை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை” எனக் கூறி அவர் கதறி அழுதார். ரவிமோகன் மேலும் கூறியதாவது: “ஒரே நாளில் விவாகரத்து செய்திருக்க முடியும். ஆனால் என் பிள்ளைகளுக்காக அமைதி காத்தேன். எனக்கு கஷ்டம் வரும்போதெல்லாம் என்னுடன் இருந்தவர் என் தோழி கெனிஷா. அழகுக்காக செல்பவன் என்றால் எப்போதோ சென்றிருப்பேன். என்னுடன் இருந்த என் தோழியை அனுப்பிவிட்டீர்கள். ஏற்கனவே என் மீது பல கோடி கடன், வழக்குகள் உள்ளன. ஆனாலும் சிரித்தபடியே இருந்தேன். ஏஐ மூலம் எடிட் செய்து எனக்கு எதிராக பரப்புகிறார்கள். சைபர் துன்புறுத்தலால் பலர் உயிரிழந்துள்ளனர். ஆர்த்தியும் அவரது குடும்பத்தினரும் என்னை பிளாக்மெயில் செய்து அடிமையாக வைத்திருந்தன...