Posts

Showing posts with the label 2009 films

இந்த ஒரு படத்திற்காக SSR-ன் மகதீரா படத்தை மிஸ் செய்த சூர்யா! Worth Miss தான் என பாராட்டும் ரசிகர்கள்!

Image
நடிகர் சூர்யாவின் திரை வாழ்க்கையில் இன்றளவும் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாகப் பார்க்கப்படும் படம் இயக்குனர் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 2009-ல் வெளியான அயன். இந்தப் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் எஸ்.எஸ். ராஜமௌளி இயக்கத்தில் உருவாக இருந்த மகதீரா படத்தை சூர்யா தவறவிட்டதாக ரெட்டிட் தளத்தில் பரபரப்பான விவாதம் நடைபெற்று வருகிறது. “2009-ல் சூர்யா தங்கத்தை தள்ளிவிட்டு வைரத்தை தேர்ந்தெடுத்தார்” என்ற தலைப்பில் ரெட்டிட்டில் வெளியான பதிவு ஆயிரக்கணக்கான அப்கோட்டுகளைப் பெற்றுள்ளது. பல ரசிகர்கள் “இது Worthதான மிஸ் தான்” என்று தங்கள் கருத்தைப் பதிவு செய்துள்ளனர். அயன் படத்தில் சூர்யா நடித்த தேவா கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது. ஸ்மார்ட் ஆக்‌ஷன், ஸ்டைலான வில்லன், ஹாரிஸ் ஜெயராஜின் இசை, கே.வி. ஆனந்தின் கதைசொல்லல் ஆகியவை இணைந்து அயனை ஒரு கல்ட் கிளாசிக் ஆக்கியது. பல ரசிகர்கள் “அயன் இன்னும் ரீவாட்ச் செய்யும்போது புதுசு மாதிரி இருக்கும். மகதீராவை விட அயன்தான் எனக்கு பிடிக்கும்” என்று எழுதியுள்ளனர். மகதீரா ராம் சரண் நடிப்பில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் என்பதில் சந்த...