இரத்தம் கேட்கும் போது சாதி வேணாம்! கல்யாணம் பண்ணும் போது மட்டும் சாதி வேணுமா?
சமீபத்தில் நீயா நானா நிகழ்ச்சியில் ஒரு பெண் எழுப்பிய கேள்வி பலரின் உச்சி குளிர வைத்தது. “மருத்துவமனையில் உயிருக்கு போராடும் போது சாதி பார்க்காமல் ரத்தம் தானே ஏற்றுக் கொள்கிறீர்கள். ஆனால் கல்யாணம் என்று வரும்போது மட்டும் இந்த சாதியில் பெண், இந்த சாதியில் பையன் என்று பார்க்கிறீர்களே? இந்த சாதிப் பற்று உயிரைக் காப்பாற்றும் போது ஏன் இல்லை?” என்ற கேள்வி பலரை சிந்திக்க வைத்தது. சாதியைப் பற்றி பேசினாலே கொலை குற்றவாளிகளைப் போல பார்க்கும் கண்ணோட்டம் இன்று நாடு முழுவதும் பரவியுள்ளது. சாதி ஒழிப்பு என்று பேசுபவர்களை “நாட்டைக் காக்க வந்த தெய்வங்கள்” என்று போற்றும் பழக்கமும் நம் சமூகத்தில் ஊறிப்போய் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நேரடியான, வரலாற்று அடிப்படையிலான பதிலைப் பார்ப்போம். சாதி எப்படி உருவானது? பழங்காலத்தில் சாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்டு உருவானது. தொழில் என்பது கடவுளுக்கு நிகராகக் கருதப்பட்டது. “செய்யும் தொழிலே தெய்வம்” என்று இன்றும் பலர் கூறுவதைப் பார்க்கிறோம். ஒருவரின் தொழிலை மற்றொருவர் ஆக்கிரமித்து அவரது வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடாது என்பதே அந்தக் காலத்து அடிப்படை ...