வேணாம்.. தப்பு.. வலிக்குது.. மாமியாரை பார்க்கக்கூடாத கோலத்தில் பார்த்த மருமகன்.. ரத்த வெள்ளத்தில் கிடந்த சடலம்..
தெலுங்கானா மாநிலம், நாகர் கர்நூல் மாவட்டம், கல்வகுர்த்தி (Kalwakurthy) மண்டலத்தில் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த மருமகன் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடிப்பழக்கம் தொடர்பான தகராறு கொடூரமாக மாறியது கல்வகுர்த்தி பகுதியைச் சேர்ந்த 60 வயதான மல்லிகா (பெயர் மாற்றப்பட்டது) என்ற பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகிறார். இளைய மகளை அதே பகுதியைச் சேர்ந்த 40 வயதான நரசிம்மா என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. கூலி வேலை செய்து வந்த நரசிம்மா குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததால், தினமும் குடித்துவிட்டு வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். அக்கம் பக்கத்தினருடன் தேவையில்லாமல் தகராறு செய்து வந்த அவர், மனைவி குடிப்பதைத் தடுக்க முயன்றபோது ஆத்திரமடைந்து அடிக்கடி அடித்து வந்துள்ளார். இதனால் இடையறாத வாக்குவாதங்கள் ஏற்பட்ட நிலையில், இளம் பெண் தனது குழந்தைகளுடன் தாய் மல்லிகா வீட்டிற்குச் சென்று தங்கி வந்துள்ளார். மனைவி பிரிந்து சென்றதைத் தாங்க முடியாமல், ...