Posts

Showing posts with the label preparation importance

உறுப்பின் அளவு முக்கியமா? வலி வராமல் இருக்க கரெக்டான பொசிஷன் இது தான்! மருத்துவர் விளக்கம்!

Image
பாலியல் சுகாதாரம் : ஆண்களின் உறுப்பு அளவு சந்தேகங்கள் மற்றும் பெண்களின் உடலுறவு வலி பிரச்சனைகள் குறித்து மருத்துவர் நிவேதா வைத்தியநாதன் விளக்கம் பாலியல் மருத்துவ நிபுணர் டாக்டர் நிவேதா வைத்தியநாதன், ஆண்கள் மற்றும் பெண்களிடையே பொதுவாக எழும் பாலியல் சுகாதார சந்தேகங்களுக்கு தெளிவான விளக்கம் அளித்துள்ளார். ஆண்களிடம் அடிக்கடி எழும் முக்கிய சந்தேகம், தங்கள் உறுப்பின் அளவு போதுமானதா என்பதாகும். இது தங்கள் துணைவருக்கு திருப்தியை அளிக்குமா அல்லது கர்ப்பம் தரிக்க உதவுமா என்ற கவலை பலருக்கும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். ஆனால், உறுப்புக்கு ஒரு குறிப்பிட்ட அளவு அல்லது வடிவம் என்ற வரையறை இல்லை என்று டாக்டர் நிவேதா தெரிவித்தார். உலக அளவில் நடைபெற்ற பல ஆய்வுகளின்படி சராசரி அளவுகள் இருந்தாலும், அதை மட்டுமே அளவுகோலாகக் கொள்ளத் தேவையில்லை. பொதுவாக 4 முதல் 5 இன்ச் அளவிலான உறுப்பு இருந்தாலே பெண்களுக்கு உச்சக்கட்ட திருப்தியை அளிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், கர்ப்பம் தரிப்பதற்கும் உறுப்பின் அளவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சரியான விதத்தில் விந்து வெளியேற்றம் நடைபெற்றால், விந்தணுக்கள் தாங்களாகவே...