Posts

Showing posts with the label producers

ஜனநாயகன் லீக் செய்தது இவர்கள் தான்! இயக்குனர் ஹெச்.வினோத் கூறிய பகீர் தகவல்கள்!

Image
சென்னை: இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான விஜய் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையத்தில் முழுமையாகக் கசிந்துள்ள சம்பவம் தமிழ் சினிமா உலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பொங்கல் வெளியீட்டுக்குத் திட்டமிடப்பட்டிருந்த படம் சென்சார் சிக்கல் காரணமாக தள்ளிப்போன நிலையில், கடந்த வியாழக்கிழமை 5 நிமிடக் காட்சிகள் கசிந்ததைத் தொடர்ந்து 3 மணி நேர முழு திரைப்படமும் இணையத்தில் லீக் ஆனது. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளம் நடித்த இந்தப் படம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு மே மாதம் இரண்டாம் வாரம் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்திருந்தது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் நீதிமன்றம் வரை சென்ற படக்குழு, தற்போது படத்தை வெளியிட தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இந்த லீக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தயாரிப்பாளர் தனஞ்சயன் தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்தார். “படம் இடையகத்தில் லீக் ஆகிவிட்டதாக வரும் தகவல்கள் கவலைக்குரிய ஒன்று. இது கோபத்தை ஏற்படுத்தும் செயல். இதைச் செய்தவர் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட ...