CM விஜயின் முதல் வெற்றி.. ஸ்டாலின் திணறல்!
புதுடெல்லி / சென்னை : கரூர் துயர சம்பவம் தொடர்பான உச்ச நீதிமன்ற வழக்கில் திமுக தாக்கல் செய்த இடையீட்டு மனுவை வாபஸ் பெற்றது. இந்த முடிவு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்க்கு முக்கிய சட்ட ரீதியான வெற்றியாகவும், திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு பின்னடைவாகவும் அரசியல் விமர்சகர்களால் பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பரில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) நடத்திய பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த கரூர் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கு தற்போது சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், முதலமைச்சர் விஜய் உள்ளிட்ட தவெக தலைவர்கள் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்திப்பதற்கும், வழக்கு தொடர்பாக பேசுவதற்கும் தடை விதிக்கக் கோரப்பட்டிருந்தது. மேலும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்டோரின் பேச்சுகள் வழக்கு விசாரணையை பாதிக்கும் எனக் குற்றம் சாட்டப்பட்டது. இன்று (ஜூலை 7) உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அலோக் அராதே அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த இந்த மனு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. விசாரணையின...