மகளுக்காக இரவு, பகலாக உழைக்கிறேன்.. அவள் இப்படி நடக்கிறாள்.. கர்ப்பமான பிரபல யூட்யூப் சிறுமி.. தந்தை வேதனை..
சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்த கார்த்திக் (பெயர் மாற்றப்பட்டது), தன் மகள் சுபாஷினிக்காகவே (17) தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். எட்டு ஆண்டுகளுக்கு முன் மனைவியை இழந்த பிறகு, மகளின் எதிர்காலத்தைக் கருதி மறுமணம் செய்யாமல், இரவு பகலாக உழைத்து வந்தார். ஆனால், மகளின் சமீபத்திய நடவடிக்கைகள் அவரை மனமுடைந்து போலீஸ் நிலையத்தில் வேதனையை வெளிப்படுத்த வைத்தன.சுபாஷினி, இன்ஸ்டாகிராமில் 30,000 பின்தொடர்பவர்களைக் கொண்டு, தனது நண்பர்களுடன் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமாக இருந்தார். சமீபத்தில், ஆண்கள் போன்று உடையணிந்து, தோழியுடன் யூடியூப் பேட்டியில் தோன்றி வைரலானார். ஆனால், கார்த்திக்கால் மகளை முழுமையாக கவனிக்க முடியாததால், அவர் சென்னை பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள தனியார் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். கடந்த மூன்று நாட்களாக சுபாஷினிக்கு சிறுநீரகத் தொற்று ஏற்பட்டு, காப்பக உரிமையாளர் கார்த்திகேயன் அவரை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். ஆனால், ஜூலை 30 அன்று, சுபாஷினி தனது செல்போன் உள்ளிட்ட பொருட்களை மருத்துவமனையில் விட்டுவிட்டு தப்பிச் சென்றார். பதறிய கார்த்திகேயன், மருத்துவமனைய...