“7 பெண்களுடன் உல்லாசமாக இருந்த ஃபாதரும்.. ஃபாதரோட ஃபாதர் செய்த அசிங்கமும்..” பரகோலத்தின் பரம பிதாவே இவர்களை தண்டியுமையா!
தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருநெல்வேலி, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு சம்பவம். தன்னை பாதர் (Pastor) எனக் கூறிக்கொண்டு பைபிள் காலேஜ் படித்தவர் என்று தெரிவித்து பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து கொண்டு, பணம், நகைகள் மோசடி செய்ததாக பிரசாத் என்பவர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பிரசாத் தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர். அவர் தன்னை கிறிஸ்தவ ஊழியர் என்று அறிமுகப்படுத்தி, மேட்ரிமோனி தளங்கள் மூலம் பெண்களை அணுகியதாகக் கூறப்படுகிறது. முதல் திருமணம் மற்றும் கொடூரம் 2018இல் நெல்லை மாவட்டம் குண்டத்தூர் பகுதியைச் சேர்ந்த பிரசன்னா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். துபாயில் பொரியாளர் வேலை கிடைத்ததாகக் கூறி மனைவியை துபாய்க்கு அழைத்துச் சென்றார். மனைவியின் நகைகளை விற்று சொகுசு வாழ்க்கை வாழ்ந்து, பின்னர் அவளை மெலிந்த உடலுடன் தனியாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்ததாகக் குற்றச்சாட்டு. தற்போது பிரசன்னா கை-கால் செயலிழந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது தாயார் பாக்கியம் கூறுகையில், "என் மகளை இப்படி...