விடிந்தால் திருமணம்.. நள்ளிரவில் தாயுடன் உல்லாசம்.. மணப்பெண் செய்த வினோதம்.. மிரண்ட போலீஸ்..
தெலுங்கானா : திருமண மண்டபம் முழுக்க உறவினர்கள், இசை, மலர்கள் என பரபரப்பாக இருந்தது. நாளை காலை விடிந்ததும் திருமணம் நடக்க இருந்த நிலையில், மணப்பெண்ணின் கண்களில் சந்தேகத்தின் நிழல் படர்ந்தது. அந்த சந்தேகம் அவரது வாழ்க்கையையே காப்பாற்றிய அதிர்ச்சி நிகழ்வு இப்போது தெலுங்கானா போலீசாரை அதிர வைத்துள்ளது. சம்பவம் தெலுங்கானாவின் ஒரு புறநகர் பகுதியில் நடந்தது. 24 வயதான அனுஷா (பெயர் மாற்றப்பட்டது) எனும் இளம்பெண்ணுக்கு அவரது தாயார் பத்மா (45) மூலமாக ரவி (28) என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. பத்மா அனுஷாவின் நேரடி தாய் கிடையாது. அனுஷாவுடைய அம்மா இறந்து விட, பத்மாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார் அனுஷாவின் தந்தை ஜப்பர் சிங். கொரோனா காலத்தில் ஜப்பர் சிங் இறந்துவிட, பத்மாவும், அனுஷாவும் தனிமையில் இருந்தனர். குடும்ப சொத்துக்கள் அனைத்தையும் தன்னுடைய மகள் அனுஷாவின் பெயரில் எழுதி வைத்திருந்தார் ஜப்பர் சிங். திருமணம் ஏற்பாடுகள் நடந்தது. உறவினர்கள் குவிந்தனர். ஆனால், திருமணத்திற்கு முந்தைய இரவு, அனுஷாவுக்கு ஏதோ சரியில்லை எனத் தோன்றியது. தாயார் பத்மாவும், வருங்கால கணவர் ரவியும் ஒருவருக்கொருவர் பார...