Posts

Showing posts with the label Padayappa Movie

அமேசன் ப்ரைம்-ல் இருந்து நீக்கப்பட்ட "படையப்பா" - அதிரடி நடவடிக்கை எடுத்த ரஜினிகாந்த்..!

Image
சமீப காலமாக தமிழ் திரைப்படங்கள் பலவற்றை ஆன்லைனில் பார்க்க உதவுகிறது அமேசான் ப்ரைம் வீடியோ. இதிலிருந்து ‘படையப்பா’ திரைப்படம் திடீரென நீக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  புதிய திரைப்படங்களை வெளியிடும் ஓடிடி தளங்களில் மிகவும் பிரபலமானது அமேசான் ப்ரைம். இதில், சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்த் சொந்தமாக தயாரித்து நடித்து 2000ல் வெளியான “படையப்பா” திரைப்படமும் வெளியாகியிருந்தது.  இந்த படத்தை அமேசானில் வெளியிடுவது குறித்து நடிகர் ரஜினிகாந்திடம் முறையான அனுமதி கோரப்படவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து ரஜினிகாந்த் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அமேசான் தளத்திலிருந்து ‘படையப்பா’ நீக்கப்பட்டுள்ளது.  மேலும், படங்களை ஆன்லைன் தளங்களுக்கு வழங்க சம்பந்தபட்ட நிறுவனத்திற்கு உரிமைகள் வழங்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனை ரஜினி ரசிகர்கள் கவனித்து டிவிட்டரில் ட்ரெண்டாக்கினர். இது ரஜினியின் கவனத்திற்கு சென்று அவர் எடுத்த உடனடி நடவடிக்கை காரணமாக "படையப்பா" திரைப்படம் அமேசான் ப்ரைம் வீடியோ லிஸ்டில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

படையப்பா படத்தில் முதலில் நீலாம்பரியாக நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா.? - ஷாக் ஆகிடுவீங்க..!!

Image
கடந்த 1999-ம் ஆண்டு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான படையப்பா திரைப்படம் செம்ம ஹிட் அடித்தது. வெறும் ஐந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கபட்ட இந்த படம் வெளியாகி உலகம் முழுதும் 38 கோடி ரூபாய் வசூல் செய்தது. இந்த படத்தில் ரஜினியை ஓவர்டேக் செய்து பெயர் எடுத்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அவர் ஏற்று நடித்திருந்த கதாபாத்திரம் தமிழ் சினிமாவிற்கு புதிது. ஒரு பெண் இப்படியுமா மோசமாக நடந்து கொள்வாள் என்று கூறும் அளவுக்கு அவருடைய கதாபாத்திரம் அமைத்திருந்தது.  நீலாம்பரியாக நடித்தார் என்பதை விட நீலம்பரியாகவே வாழ்ந்தார் என்று சொன்னால் சரியாக இருக்கும். இந்த படம் வெற்றி பெற்றதற்கு காரணமே அவர் தான் என்று கூறலாம். படம் முழுக்க தோன்றும் கதாபாத்திரம் என்பதால் செம்ம ரீச். இது ரம்யாகிருஷ்ணன் தமிழ் சினிமாவில் அடுத்த ரவுன்ட் வருவதற்கு உதவியாக இருந்தது. ஆனால், இந்த படத்தில் முதலில் நீலாம்பரியாக நடிக்க நடிகை நக்மா-வை டிக் செய்து இறுதியாக நடிகை மீனாவை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.  மீனாவின் முக பாவனை அப்பாவியாகவே இருப்பதால் வில...

"படையப்பா" படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா..? - 20 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான புகைப்படம்

Image
ரஜினிகாந்திற்கு ப்ளாக் பஸ்டர் கொடுத்த படங்களில் ஒன்று கடந்த 1999-ம் ஆண்டு வெளியான "படையப்பா". இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சிவாஜி கணேசன், லட்சுமி, ரம்யா கிருஷ்ணன், மணிவண்ணன் என்று நட்சத்திர பட்டாளமே நடித்த படம்.  இப்படத்தில், ஹீரோயினாக நடித்த சௌந்தர்யாவின் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் முதலில் இவர்தான் நடிக்க இருந்தது சௌந்தர்யா இல்லை என்றும் வேறு நடிகை என்றும் அதற்கான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  இயக்குனர் K.S ரவிக்குமார், நக்மா மற்றும் ரஜினிகாந்த் ஆகியோர் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த அந்த புகைப்படம்தான் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில், முதன் முதலாக ஹீரோயினாக நடிக்க நடிகை நக்மா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சில நாட்கள் ஷூட்டிங்கிலும் கலந்து கொண்டுள்ளார்.  ஆனால் அதன் பிறகு என்ன ஆச்சுன்னு தெரியல. படப்பிடிப்பில் அவர் கலந்து கொள்ளவே இல்லை.இதன் காரணமாக, அவசர அவசரமாக சௌந்தர்யா ஒப்பந்தம் செய்யப்பட்டு அப்பாவி பெண் கதாபாத்திரத்தில் நடித்து தனது நடிப்புத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.  இப்படத்தில் வசுந்தரா என்ற ரோ...