Posts

Showing posts with the label rectal tissue

வானவில் நண்பர்கள் சாதாரண மக்களுக்கு இரத்த தானம் செய்யக்கூடாது! அரசு அதிரடி! பின்னணியில் பகீர் காரணம்!

Image
சென்னை, மார்ச் 31, 2026 : வானவில் நண்பர்கள் (LGBTQ+ சமூகத்தினர்), குறிப்பாக ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்கள் (MSM), திருநங்கைகள் மற்றும் பாலியல் தொழிலாளர்கள் இரத்ததானம் அளிக்கக் கூடாது என்ற 2017ஆம் ஆண்டு அரசு வழிகாட்டுதல்களை மத்திய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. தேசிய இரத்ததான கவுன்சில் (NBTC) மற்றும் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு (NACO) வெளியிட்ட இந்த வழிகாட்டுதல்கள், பொது சுகாதாரத்தைப் பாதுகாக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்டவை என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. ஏன் இந்தத் தடை? இது வெறும் பாரபட்சம் அல்ல; அறிவியல் ரீதியான அபாயங்களை அடிப்படையாகக் கொண்டது. மனித உடலின் மலக்குடல் (ரெக்டல் லைனிங்) பகுதி மிகவும் மெல்லிய திசுவால் ஆனது. ஒரு பெண்ணின் யோனியை விட பல மடங்கு மெல்லிய இந்தத் திசு, சிறிய அழுத்தம் அல்லது உரசலுக்குக் கூட எளிதில் கீறல்கள் (tears) ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்தக் கீறல்கள் வழியாக பாலியல் தொற்று ஏற்படுத்தும் வைரஸ்கள் (HIV, Herpes, HPV போன்றவை) உடலுக்குள் எளிதில் நுழையும். மேலும், மலக்குடல் பகுதியில் CD4 T-செல்கள் அதிக அளவில் இருப்பதாக அறிவியல் ஆய்வுகள் கண...