பொறுமையை ரொம்ப சோதிக்கிறாங்க.. தடுமாறும் திரைக்கதை.. பராசக்தி விமர்சனம்..!
1960-களில் இந்தி திணிப்புக்கு எதிரான மாணவர் போராட்டத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படம், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் நீண்ட சிக்கல்களை சந்தித்தது. இறுதியாக U/A சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் 'ஜனநாயகன்' படம் வெளியாகாத சூழலில், பராசக்திக்கு 800-க்கும் மேற்பட்ட திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் திரையரங்குகளை நோக்கி சென்று வருகின்றனர். படம் வெளியான உடனேயே "எக்ஸ் (ட்விட்டர்)" தளத்தில் பல்வேறு வகையான விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன. சிலர் படத்தை உணர்ச்சிபூர்வமான சினிமாடிக் அனுபவமாகப் பாராட்டியுள்ளனர். சிவகார்த்திகேயனின் நடிப்பு அற்புதமாக இருப்பதாகவும், ஸ்ரீலீலாவின் உணர்வுப்பூர்வமான நடிப்பு நெகிழ்ச்சியூட்டுவதாகவும், பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு பிரம்மாண்டமாக இருப்பதாகவும் பலர் குறிப்பிட்டுள்ளனர். தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறுகையில், "GenZ இளைஞர்கள் கண்டிப்பாகப் பார்க்க வேண்டிய படம். மொழிப் பெருமையைப் பாதுகாத்த மாணவர்களின் போராட்டத்தை சிறப்பாகக் காட்டியுள்ளார் இயக்குநர் சுதா" என்று புகழ்ந்துள்ளார்...