Posts

Showing posts with the label Jio Hotstar

“வலிப்பு வந்து கூட விடல..” எட்டு மாதம் நடந்த சித்ரவதை! எருமசாணி விஜய் செய்த அசிங்கம்! நடிகை பகீர் புகார்!

Image
சென்னை : பிரபல நடிகை அனுகிரகா, ஜியோ ஹாட்ஸ்டார் தமிழில் வரும் சீரியலில் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து ஒரு உணர்ச்சிகரமான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். “குளோபல் வில்லேஜர்ஸ்” என்ற தயாரிப்பு நிறுவனம் தன்னை ஒரு வருட ஒப்பந்தத்தில் சிக்க வைத்து, பணம் கொடுக்காமல், படப்பிடிப்பை நடத்தாமல், பிற படங்களில் நடிக்கவும் தடை விதித்ததாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வீடியோவில் அனுகிரகா தனது அனுபவத்தை விரிவாகப் பகிர்ந்துள்ளார். “ரிசார்ட்ன்னு சொல்லி ஜியோ ஹாட்ஸ்டாரில் ஒரு சீரியஸ் செய்து கொண்டிருக்கிறேன். எனது கேரக்டர் பெயர் ஸ்ரீநிதி. ஆரம்பத்தில் சொன்னதும் இப்போது நடப்பதும் மிகவும் வித்தியாசமாக உள்ளது” என்று தொடங்கிய அவர், கடந்த நான்கு மாதங்களாக இந்தப் பிரச்னை தீவிரமடைந்துள்ளதாகக் கூறினார். ஒப்பந்தம், வாக்குறுதி... ஆனால் யதார்த்தம் வேறு எக்ஸிக்யூட்டிவ் புரொடியூசர் விஜய்குமார் மூலம் அணுகப்பட்டதாகவும், அவரது டீம் நல்லது என நம்பி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் அனுகிரகா தெரிவித்தார். “ஒரு வருட ஒப்பந்தம் போட்டு என்னை லாக் செய்துவிட்டனர். ஆனால் நான்கு மாதங்களாக எந்த வேலையும் இல்லை. படப்பிடிப...