Posts

Showing posts with the label divorced women targeting

விவாகரத்தான பெண்கள் தான் டார்கெட்.. திருப்பூர் பெரிய குடும்பத்து பெண்ணை மாதம்பட்டி ரங்கராஜ்.. ஜாய் கிரீஸில்டா பகீர் ஆதாரம்..

Image
சென்னை, நவம்பர் 14: தமிழ் திரையுலகின் பிரபல காஸ்ட்யூம் டிசைனரான ஜாய் கிறிஸில்டாவும், நடிகர்-தயாரிப்பாளர் மாதம்பட்டி ரங்கராஜும் இடையிலான உறவு சர்ச்சையாக மாறியுள்ளது. திருமணம், கருக்கலைப்பு, ஜீவனாம்சம் கோரல், மகளிர் ஆணைய பரிந்துரை என அடுக்கடுக்கான சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், ரங்கராஜின் முதல் மனைவி சுருதி பிரியாவின் ஆதரவு அறிக்கை மற்றும் ஜாயின் யூடியூப் பேட்டி இந்த விவகாரத்தை மேலும் சூடாக்கியுள்ளது. அறிமுகம் முதல் சர்ச்சை வரை 'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான ஜாய் கிறிஸில்டா, 'ஜில்லா', 'மிருதன்', 'ரெக்கை' உள்ளிட்ட பல்வேறு படங்களுக்கு ஆடைகளை வடிவமைத்து புகழ் பெற்றவர். இவரது வாழ்க்கையில் புதிய சூழல் உருவானது மாதம்பட்டி ரங்கராஜுடன் உறவு கொண்ட பிறகு. ரங்கராஜ், தனது உறவுக்கார பெண்ணான சுருதி பிரியாவை திருமணம் செய்து, அவருக்கு ஏற்கனவே இரண்டு மகன்கள் உள்ள நிலையில், ஜாயை காதலித்து திருமணம் செய்ததாக அவர் கூறுகிறார். ஆனால், ஜாயின் புகாரின்படி, ரங்கராஜ் தன்னை ஏமாற்றி, பலமுறை கர்ப்பமடையச் செய்து கருக்கலைப்பு செய்ய வைத்ததாகவும...