இப்படி உடலுறவு கொள்வது தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்! மருத்துவர் கூறிய சீக்ரெட்!
தாம்பத்திய வாழ்க்கை என்பது வெறும் உடல் நெருக்கம் மட்டுமல்ல. அது இருவரின் மனம், உடல், புரிதல் ஆகியவை இணைந்து உருவாக்கும் ஒரு பயணம். இந்தப் பயணத்தில் பல தம்பதியினர் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று, மனைவி முழுமையாக தயாராகும் முன்பே உறவில் ஈடுபடுவது. இது குறித்து மருத்துவர் கீதா வினோதன் தனது மருத்துவ அனுபவத்தின் அடிப்படையில் தெளிவாக பேசியுள்ளார்.அவர் கூறுவது போல, தாம்பத்திய நலம் குறித்து ஆலோசனைக்கு வரும் தம்பதியினரில் பெரும்பாலோர் இந்த ஒரு விஷயத்திலேயே சிக்கலை எதிர்கொள்கின்றனர். கணவன் உடனடியாக உறவைத் தொடங்க விரும்புகிறார். ஆனால் மனைவிக்கு அந்த நேரத்தில் உடலும் மனமும் அதற்கு தயாராக இருக்காது. இதனால் உறவு அனுபவம் இருவருக்கும் திருப்தியாக அமைவதில்லை. குறிப்பாக பெண்ணுக்கு அசௌகரியமும், மன அழுத்தமும் ஏற்படுகிறது. ஏன் முன் தயாரிப்பு அவசியம்? பெண்ணின் உடல் ஆணின் உடலைப் போல உடனடியாக தயாராவதில்லை. ஆண்களுக்கு விறைப்பு தன்மை ஏற்பட்டவுடன் தயார் நிலை உண்டாகிவிடும். ஆனால், பெண்ணின் உடலுக்கு தாம்பத்திய உறவுக்குத் தயாராக ஒரு குறிப்பிட்ட நேரம் தேவை. அது சில வினாடிகளில் இருந்து, அவர்களின் உடல் ...