அந்த உறுப்பில் சிகரெட் சூடு.. உள்ளே கம்பை வைத்து குத்தி சித்ரவதை.. அதிர வைக்கும் போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்!
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மதபுரம் பத்ரகாளியம்மன் கோயிலில் பாதுகாவலராகப் பணியாற்றிய 27 வயது அஜித் குமார், காவல் துறை விசாரணையின் போது கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 27, 2025 அன்று, கோயில் பக்தர் ஒருவரின் நகை திருட்டு புகாரின் பேரில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட அஜித், மறுநாள் உயிரிழந்தார். இவரது மரணம் குறித்து வெளியாகிய மருத்துவ அறிக்கைகள், பொதுமக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே கடும் கோபத்தைத் தூண்டியுள்ளது. மருத்துவ அறிக்கையின்படி, அஜித் உயிருடன் இருக்கும்போது அவரது உடலில் சிகரெட்டால் சூடு வைக்கப்பட்டதாகவும், தலையில் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மண்டை ஓடு உடைந்து மூளையில் ரத்தக்கசிவு ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. மேலும், தொப்புள் அருகே கம்பால் குத்தப்பட்டதால் குடலில் கொடூரமான காயங்கள் மற்றும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அவரது உடலில் 50 வெளிப்புற காயங்கள் காணப்பட்டன, மேலும் சில காயங்களில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டதற்கான ஆதாரங்களும் கண்டறியப்பட்டுள்ளன. இந்த கொடூரமான சித்...