3 முறை கருகலைப்பு.. 5 நடிகர்களுடன்.. அந்த இடத்தில் புற்றுநோய் வந்தும் வேட்டையாடிய மிருகங்கள் வலியால் துடித்த நடிகை ஸ்ரீவித்யா..
மென்மையான குரல், கவர்ச்சியான கண்கள், ஆழமான உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் நடிப்பு – இவை அனைத்தும் நடிகை ஸ்ரீவித்யாவின் அடையாளங்கள். தென்னிந்திய மொழிகளில் 800-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து, பாடகி, நடனக் கலைஞர், நடிகை என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்திய அவர், தமிழ் சினிமாவில் முழுமையாக கொண்டாடப்படாத ஒரு கலைஞராகவே நினைவில் நிற்கிறார். சொந்த வாழ்க்கையில் ஏமாற்றங்கள், சொத்து இழப்பு, தனிமை, புறக்கணிப்பு, காதல் தோல்விகள் என தொடர்ந்து அனுபவித்த துயரங்களுக்கு மத்தியில், கடைசிக் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருந்து வாங்கக்கூட பணமில்லாமல் தவித்த அவரது வாழ்க்கை, இன்றும் பலருக்கு ஒரு பாடமாகவே இருக்கிறது. 1953 ஆம் ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி சென்னை மயிலாப்பூரில் பிறந்தார் ஸ்ரீவித்யா. பெற்றோர் – புகழ்பெற்ற பாடகி எம்.எல். வசந்தகுமாரி மற்றும் நகைச்சுவை நடிகர் விகடன் கிருஷ்ணமூர்த்தி. வீட்டில் வைத்த பெயர் மீனாட்சி. சகோதரர் சங்கரராமன். மயிலாப்பூர் போன்ற கலைச்சூழல் நிறைந்த பகுதியில் பிறந்ததால் சிறுவயதிலேயே இசை மற்றும் நாட்டியத்தின் மீது ஆர்வம் வளர்ந்தது. அவரது எதிர்வீட்டில் திருவிதாங்கூர் சகோதரிகள் பத...