ஆசைப்பட்ட 42 வயசு நபர்.. லாட்ஜுக்கு அழைத்த 21 வயசு இளம்பெண்.. சினிமாவை மிஞ்சும் கொடூரம்..
பெங்களூரு: கடந்த 2019-ம் ஆண்டு கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில், தும்கூரைச் சேர்ந்த புகழ்பெற்ற ரவுடி ஷீட்டர் லக்ஷ்மண ராஜா கொடூரமாக வெட்டிக் கொல்Qலப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னணியில் இருந்த சினிமாவை மிஞ்சும் திருப்பங்களை பற்றி இந்த பதிவில் பார்க்க போகிறோம். ஏழை குடும்பத்தில் பிறந்த இவர், 1990களில் பெங்களூருக்கு வந்ததும் ரவுடி உலகில் ஆதிக்கம் செலுத்தி, நில அபகரிப்பு, வழிப்பறி, கட்டுமான மோசடிகள் என பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை சேர்த்துக்கொண்டார். 25-க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகளில் சிக்கிய இவர், தனது ட்வின்ஸ் சகோதரர் கோட்டி ராமனுடன் இணைந்து கேங்கள் நடத்தினார். ஆனால், விசாரணையின் போது வெளியான அதிர்ச்சி ட்விஸ்ட்: லண்டனில் படிக்கும் 21 வயது மாணவி வர்ஷிணி ஹரிஷ் மற்றும் அவரது காதலன் ரூபேஷ் ஆகியோர் தலைமையிலான சதியால் நடந்தது இந்த கொலை. லக்ஷ்மணாவின் உயிரிழப்பு: காரில் வந்த 5 பேர் கொடூரம் மார்ச் 7, 2019 அன்று அதிகாலை 11 மணிக்கு, மனைவியிடம் "யஸ்வர்ந்த்பூரில் மீட்டிங் உள்ளது, சீக்கிரம் திரும்பிவிடுகிறேன்" என்று சொல்லிவிட்டு, தனது இன...