குடும்பத்தை ஏமாற்றி சென்ற தருமபுரி பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்! 20 பேர், 3 நாட்கள்.. இறுதியில் பெரும் திருப்பம்!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 33 வயதான சரண்யா (பெயர் மாற்றப்பட்டது) ஒரு விவாகரத்து பெண். திருமணம் முடிந்த மூன்று ஆண்டுகளிலேயே கணவருடன் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். இன்னும் சட்டப்படி விவாகரத்து முடிவடையவில்லை. கடந்த நான்கு மாதங்களாக முகநூல் வழியாக பழகிய ஒரு தொழிலதிபர் எனக் கூறிய நபருடன் நெருக்கமான உரையாடல் நடத்தி வந்தார். அந்த நபர் தன்னை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை வெளிப்படுத்தியதால், சரண்யா மும்பை செல்ல முடிவு செய்தார். குடும்பத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி, தன் எதிர்காலத்தை நம்பி ரயில் ஏறினார் சரண்யா. அந்த நபர் (ராஜேஷ் எனப் பெயர் மாற்றப்பட்டது) தனக்கு ஒரு முகவரியை மட்டும் அனுப்பி, அங்கு வந்துவிடுமாறு கூறியிருந்தார். சரண்யா அந்த இடத்திற்குச் சென்றபோது, ராஜேஷ் அவரை நேரடியாக அழைத்துச் செல்லாமல், சுமார் 100 மீட்டர் தொலைவில் இருப்பதாகக் கூறி கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் நடக்க வைத்து தன் இடத்திற்கு அழைத்துச் சென்றான். முதலில் ராஜேஷ் சரண்யாவை அன்புடன் கவனித்துக் கொண்டான். குளிக்கச் செய்து, உணவு அளித்து, இரவு வரை நல்ல முறையில் நடந்து கொண்டான். ஆனால் இரவு ஆனதும் அவளை ஒரு அற...