அள்ள அள்ள பணம்..! - பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 5
வணக்கம் வணக்கம் வணக்கம்...! அள்ள அள்ள பணம்..! என்ற தலைப்பில் பங்கு சந்தையில் பணம் அள்ளுவது எப்படி என நான்கு பகுதிகளை நாம் பார்த்து விட்டோம். ஒரு வேளை, அவற்றை படிக்காமல் நேரடியாக இங்கே வந்திருந்தால் தயவு செய்து கீழே உள்ள லிங்க்குகளை பயன்படுத்தி அந்த இரண்டு பகுதிகளையும் படித்து விட்டு வாருங்கள். அப்போது தான் இந்த பகுதியை புரிந்து கொள்ள முடியும். 1. பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 1 2. பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 2 3. பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 3 4. பங்குசந்தையில் பணம் அள்ளுவது எப்படி..? - பகுதி 4 வணக்கம் நண்பர்களே..! கடந்த பகுதியில் மார்கெட்டில் எந்தெந்த வகையில் ட்ரேடிங் செய்யலாம் என்பதை சுருக்கமாக பார்த்திருந்தோம். அவற்றை, அடுத்தடுத்து வரும் பகுதிகளில் தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கலாம். இப்போது, Intraday Treading என்றால் என்ன..? Delivery Based Trading என்றால் என்ன..? இரண்டிற்கும் உள்ள சாதக பாதகங்கள் என்ன என்பதையும். Trade செய்வதற்கு எப்படி சரியான நிறுவனங்களை தேர்வு செய்...