Posts

Showing posts with the label per gram rate

சடசடவென சரிந்த தங்கம் விலை.. வரலாற்றில் இல்லாத வீழ்ச்சி.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்..

Image
சென்னை, அக்டோபர் 24 : தீபாவளி பண்டிகைக்கு முன் உச்சமடைந்த ஆபரணத் தங்க விலை, கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. இன்று மாலை நிலவரப்படி, சென்னையில் சவரன் தங்க விலை ₹1,120 குறைந்து ₹91,200க்கு விற்பனையாகிறது. ஒரு கிராமுக்கு ₹11,400 எனும் விலையில் விற்பனை நடைபெறுகிறது. இது காலை நிலவரத்தை விட கிராமுக்கு ₹140 குறைவு.தங்க விலை நாளொன்றுக்கு இரண்டுமுறை - காலை மற்றும் மாலை - நிர்ணயிக்கப்படுகிறது. இன்று காலை, சரிவுக்கு மாற்றாக சலுகை விலையில் விற்பனைக்கு வந்தது. நேற்று மாலை கிராமுக்கு ₹11,500 எனும் விலையில் விற்கப்பட்ட தங்கம், இன்று காலை சவரனுக்கு ₹320 உயர்ந்து ₹92,320க்கு விற்பனையானது. இது கிராமுக்கு ₹40 உயர்வு. ஆனால், மாலை நேரத்தில் மீண்டும் ₹140 (கிராமுக்கு) / ₹1,120 (சவரனுக்கு) குறைந்து, வாங்குபவர்களுக்கு நிவாரணமாக அமைந்துள்ளது. கடந்த சில மாதங்களாக உலக சந்தை சார்ந்த காரணங்களால் தங்க விலை தொடர்ந்து ஏறி வந்தது. குறிப்பாக தீபாவளி பண்டிகைக்கு முந்தைய நாட்களில், சவரனுக்கு ₹97,600 எனும் வரலாற்ற உச்ச விலைக்குத் தொட்டது. இது அதிகபட்ச விற்பனை விலையாகப் பதிவாகியது. அதன் பின், கடந்த நான்கு ...