பனைமரம் அருகே விளையாடிய சிறுவன் துடிதுடித்து உயிர் விட்ட சோகம்.. ஒன்றை தொட்டால் கூட்டமாக பலி வாங்கும் புது எமன்
தமிழகத்தில் கதண்டு (Yellow Jacket Wasp) கடித்து உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் பல மாவட்டங்களில் இதுபோன்ற துயர சம்பவங்கள் பதிவாகியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கத்தில் ஏழு வயது சிறுவன் அர்த்தனேஷ், பனைமரத்தில் இருந்து கதண்டு கடித்ததில் உயிரிழந்த சம்பவம் சமீபத்திய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதே சம்பவத்தில் மேலும் இரண்டு பெண்கள் மற்றும் நான்கு சிறுவர்கள் கடிக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பூரண குணமடைந்துள்ளனர். ஜூலை மாதத்தில் பதிவான உயிரிழப்புகள்:நெல்லை மாவட்டம், திருக்குருங்குடி (ஜூலை 1): ஏழு வயது சிறுவன் ஜீவானந்தம் கதண்டு கடித்து உயிரிழந்தான்.தென்காசி, சீவநல்லூர் (ஜூலை 21): கோயிலுக்கு சென்று திரும்பிய கணவன்-மனைவி லட்சுமணன் மற்றும் மகராசி (இருவருக்கும் 60 வயதுக்கு மேல்) கதண்டு கடித்து உயிரிழந்தனர்.கரூர், மேட்டு திருக்காம்புளியூர் (ஜூலை 29): கூலித்தொழிலாளி வேலுச்சாமி (வயது 40) கதண்டு கடித்து உயிரிழந்தார். கதண்டு ஏன் ஆபத்தானது? கதண்டு, மஞ்சள் நிறத்தில், தேனீக்களைப் போல கூட்டமாக வாழும் பூச்சியாகும்...