90ஸ் கிட்ஸின் பேவரைட் பெப்சி உமாவிற்கு இத்தனை கஷ்டங்களா..? - இப்போது எப்படி இருக்கிறார், என்ன செய்கிறார் பாருங்க..!
தொலைக்காட்சி நிகழ்சிகளை தொகுத்து வழங்கி 90ஸ் கிட்ஸ்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் பெப்சி உமா. தொடர்ந்து, 15 ஆண்டுகளாக ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய பெருமைகுடையவர் இவர். ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை இரவில் 'பெப்ஸி உங்கள் சாய்ஸ்' எனப்படும் ரசிகர்களுக்கு பிடித்த பாடலை தொலைபேசியில் கேட்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பெப்சி உமாவிற்கு கட் அவுட் வைத்து ரசிகர் மன்றம் வைத்த ரசிகர்களும் இருக்கின்றனர். சன் டிவி, கலைஞர் டிவி போன்ற தொலைகாட்சி சேனல்களில் வேலை பார்த்து வந்த இவர் இடையில் சிறிது காலம் மீடியாவில் இருந்து ஒதுங்கி விட்டார். இறுதியாக ஜெயா தொலைகாட்சியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்த இடைவெளி குறித்து அவரிடம் கேட்கும் போது, எல்லாம் காலத்தின் கட்டாயம் தானே தவிர வேறு எதுவும் இல்லை என்று தனக்கே உரிய புன்னகையை உதிர்க்கிறார். பன்னிரண்டாம் வகுப்புபடிக்கும் போது தூர்தர்ஷன் தொலைகாட்சியில் தொகுப்பாளினியாக என் பயணத்தை தொடங்கினேன். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த வரவேற்பு காரணமாக சன் டிவியில் அழைத்தார்கள். அங்கே 15 வருடம் பெப்ச...