சுச்சிலீக்ஸ் புகைப்படங்களை இவருக்கு தான் அனுப்பினேன்? SMS பட நடிகை அனுயா பரபரப்பு பேட்டி!
தமிழ் சினிமாவில் ‘சிவா மனசுல சக்தி’ படத்தின் மூலம் பிரபலமான நடிகை அனுயா பகவத், சமீபத்திய பேட்டி ஒன்றில் சுச்சி லீக்ஸ் சர்ச்சை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த சம்பவத்தால் தனது சினிமா வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்பட்டது, மனநிலை எப்படி சீர்குலைந்தது என்பதை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். யார் இந்த அனுயா பகவத்? அனுயா ஒய். பகவத் (Anuya Y. Bhagwat) 1989 செப்டம்பர் 6 அன்று துபாயில் பிறந்தவர். புனேவில் உள்ள பி.வி.ஜி. கல்லூரியில் எலக்ட்ரிகல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றவர். பின்னர் புனேவின் பிலிம் அண்ட் டெலிவிஷன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவில் (FTII) நடிப்பு பயிற்சி பெற்றார். இந்தி திரைப்படமான மகேக் (2007) மூலம் அறிமுகமான இவர், தமிழில் 2009-ல் வெளியான சிவா மனசுல சக்தி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக சக்தி கதாபாத்திரத்தில் நடித்து பெரும் கவனம் பெற்றார். இந்தப் படத்திற்காக விஜய் விருதுகள் சிறந்த அறிமுக நடிகை பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். அதன்பிறகு மதுரை சம்பவம் (2009), நகரம் (2010), நஞ்சுபுரம் (சிறப்புத் தோற்றம், 2011), நண்பன் (2012), நான் (2012) உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2017-ல் பிக் ப...