Posts

Showing posts with the label parental oversight

“ஸ்பெஷல் கிளாஸ் என கிளம்பிய +1 மாணவி..” நடுரோட்டில் பிணமான சம்பவம்.. வெளியான குலைநடுங்க வைக்கும் CCTV காட்சி..

Image
தென்காசி, அக்டோபர் 11: தென்காசி மாவட்டம் குடிபோதை பகுதியில் ஜெட் வேகத்தில் பைக்கை முறுக்கிய காதலனின் அலட்சியத்தால் ஏற்பட்ட விபத்தில் 16 வயது பிளஸ் 1 மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குப் பிறகு மாணவியை சாலையில் தூசி தூற்றிவிட்டு ஓட்டம் பிடித்த கல்நெஞ்ச இளைஞரை போலீசார் இரண்டு நாட்களுக்கு பிறகு கைது செய்துள்ளனர். நொடிப்பொழுதில் நடந்த இந்த விபத்தை பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போர் அனைவரையும் நடுநடுங்க வைத்துள்ளது.வல்லம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி, அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்ற இளைஞரும் அவரும் கடந்த சில மாதங்களாகக் காதலித்து வந்ததாகத் தெரிகிறது. சம்பவம் நடந்த நாள், "ஸ்பெஷல் கிளாஸ் உள்ளது" எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறிய மாணவி, ரமேஷைப் பார்க்க சென்றார். வல்லம் குளத்து கரையில் காத்திருந்த ரமேஷ், உயர்ரக பைக்கில் மாணவியை அமர வைத்து ஓட்டிச் சென்றார்.ஆளில்லா சாலையில் அதிவேகமாக சீறிப்பாய்ந்த பைக் கட்டுப்பாட்டை இழந்து குடிபோதை பகுதியில் விபத்துக்குள்ளானது. சாலையில் உரசி பலமுறை உருண்டு சென்ற பைக், மாணவியின் தலை...