படுக்கையில் ஆசிரியை.. தூக்கில் மாணவன்.. 3 நாட்களாகியும் முதலிரவு நடக்கல.. மாமியார் வீட்டில் மாணவன் மர்ம மரணம்!
மைசூர், கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் ஒரு பெண் ஆசிரியையின் கட்டாயத் திருமணம் சோகமான முடிவை எட்டியுள்ளது. திருமணம் முடிந்து மூன்றாவது நாள் கணவர் தூக்கில் தொங்கியபடி மர்மமான முறையில் உயிரிழந்தார். மனைவி கணவன் அவரது முன்னாள் மாணவனை என்பதால் திருமணத்துக்கு உடன்படாத நிலையில், முதலிரவை மறுத்ததால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. கணவர் வீட்டார் இதை ‘கொலை’ எனக் கூறி போலீசில் புகார் அளித்துள்ளனர். விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. சம்பவம் குறித்து விவரங்கள்: காவ்யா (28) என்ற ஆசிரியை, மைசூர் அருகிலுள்ள ஒரு டுடோரியல் கல்லூரியில் பணியாற்றி வந்தார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த கல்லூரியில் அருண் என்ற மாணவன் படித்தார். காவ்யாவிற்கு வரன் தேடும் பணியில் இறங்கிய குடும்பத்தினருக்கு, மகள் காவ்யாவின் முன்னாள் மாணவன் அருணின் சந்திப்பு கிடைத்தது. அவரது வேலை மற்றும் குடும்ப அந்தஸ்தை காரணம் காட்டி, “நல்ல சம்பந்தமா தெரியுது.. பார்த்து திருமணம் செய்து கொள்” என்று காவ்யாவை கட்டாயப்படுத்தினார். அவன் என்னோட முன்னாள் மாணவன் என இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காவ்யா, குடும்பத்துடன் சண்டை ...