"பெருசா இருக்கு.. கொஞ்சம் **** ரிலாக்ஸ் பண்ணி *** விடு.." மின் இணைப்பு கேட்ட பெண்ணை உல்லாசத்துக்கு அழைத்த அரசு அதிகாரி!
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளமடம் அருகே உள்ள திருப்பதிச்சாரம் பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவர், தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். பெட்ரோல் பங்கில் பணியாற்றி வரும் இவர், மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வக்பு வாரியத்திற்கு உட்பட்ட ஒரு இடத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் சிறிய வீடு கட்டியுள்ளார். வீட்டிற்கு மின்சார இணைப்பு பெறுவதற்காக, அந்தப் பகுதிக்கு உட்பட்ட மின்சார வாரிய அலுவலகத்திற்கு நேரில் சென்று கோரிக்கை மனு அளித்தார். மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரி, பீமநகரி பகுதியைச் சேர்ந்த தாணு மூர்த்தி என்பவர், பெண்ணிடம் சில விசாரணைகளை மேற்கொண்டார். அப்போது, “குறிப்பிட்ட சமுதாயத்திற்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டியுள்ளதால் மின் இணைப்பு கொடுப்பதில் சில சிக்கல்கள் உள்ளன” என்று கூறி, மனுவைப் பரிசீலனை செய்து தகவல் தெரிவிப்பதாகக் கூறி அனுப்பி வைத்தார். நீண்ட நாட்கள் கழிந்தும் எந்தத் தகவலும் வராத நிலையில், பெண் மீண்டும் அலுவலகத்திற்குச் சென்றார். அப்போது அதிகாரி ஏதேதோ காரணங்களைக் கூறி அலைக்கழித்துவிட்டு, “உங்கள் செல்போன் எண்ணைத் தாருங்கள், மனு பற்றி ...