காதலன் கொடுத்த சாக்லேட்டை வீட்டில் பிரித்த காதலி.. துடிதுடித்து பிறிந்த உயிர்.. விசாரணையில் வெளிவந்த அசிங்கம்..
கொல்கத்தா: கல்லூரி ஒன்றில் பயிலும் 20 வயது மாணவி அனன்யா சர்க்கார் (பெயர் மாற்றப்பட்டது) தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சோக சம்பவம் நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதற்கு காரணமாக அவளது கல்லூரி நண்பன் ரியான் மலிக் (பெயர் மாற்றப்பட்டது) செய்த "விளையாட்டு" என்று கூறப்படும் கொடூரமான செயல் அமைந்துள்ளது. சம்பவம் கடந்த வாரம் நடந்தது. அனன்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ரியான் அவளுக்கு ஒரு சாக்லேட் பரிசாக கொடுத்திருந்தான். "இதை யாரும் இல்லாத இடத்தில் தனியாக சாப்பிடு" என்று சிரித்தபடி கூறியிருந்தான். அனன்யா அதை வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். அன்று வீட்டில் உறவினர்கள் சிலர் இருந்தனர். அனன்யா சாக்லேட்டை பிரித்து எடுக்க முயன்றபோது, கவருக்குள் இருந்த சாக்லேட்டுடன் சேர்த்து ஒரு ஆணுறை பாக்கெட் கீழே விழுந்தது. அனைவரும் அதிர்ந்து போனார்கள். உறவினர்களின் முன்னிலையில் இப்படியொரு "அசிங்கமான" பொருள் வெளியே வந்ததால், குடும்பத்தினர் கடும் கோபத்திற்கு ஆளானார்கள். "இது எப்படி வந்தது? உன் நண்பன் யார்? என்ன உறவு உங்களுக்கு?" என்று பெற்றோரும் உறவினர்...