Posts

Showing posts with the label Ganesan murder

இன்சுரன்ஸ் பணம் 3 கோடிக்காக, தந்தையை பாம்பு ஏவி தீர்த்து கட்டிய மகன்கள்.. ஆனால், உண்மை என்ன தெரியுமா..?

Image
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே பொதட்டூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆய்வக உதவியாளர் இ.பி. கணேசன் (56) என்பவர் கடந்த அக்டோபர் 22-ம் தேதி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது விஷப்பாம்பு கடித்து உயிரிழந்ததாகக் கருதப்பட்டது. இதைத் தொடர்ந்து, அவரது மகன் மோகன்ராஜ் பொதட்டூர்பேட்டை போலீஸில் புகார் அளித்தார். ஆரம்பத்தில் சந்தேக மரணமாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால், கணேசன் பெயரில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்பிலான நான்கு உயிர் காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தது தெரியவந்தது. குடும்பத்தில் மொத்தம் 11 காப்பீட்டுத் திட்டங்கள் இருந்தன. இவை அவரது வருமானத்திற்கு ஏற்றவை அல்ல என்பதால், காப்பீட்டு நிறுவனங்கள் வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்கிடம் புகார் அளித்தன. இதன்பேரில் டிஎஸ்பி ஜெயஸ்ரீ தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. செல்போன் தகவல்கள், நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை ஆராய்ந்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கணேசனின் மகன்கள் மோகன்ராஜ் (26, சென்னையில் தனியார் நிறுவன ஊழியர்) மற்றும் ஹரிஹரன் (27, வாகன வாடகை தொழில்) ஆகியோர் இன்சூரன்ஸ் பணத்திற்காக தந்தையை கொலை செய்ய தி...