முதலிரவுக்கு ஓகே.. ஆனா, இது வேணாம்.. கணவரை பிரிந்த பெண்ணின் விசித்திர ஆசை..! குலைநடுங்க வைக்கும் காட்சிகள்!
சிதம்பரம் அருகே உள்ள மீதிக்குடி கிராமம். அங்கு ஒரு சாதாரண காலை நேரம். வீட்டு வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்த 28 வயது இளம் பெண் காமாட்சி. அவளுக்கு அப்போது 28 வயது. சில ஆண்டுகளுக்கு முன்பு கார்த்திக் என்ற இளைஞருடன் திருமணம் நடைபெற்றது. ஒரு அழகான பெண் குழந்தையும் அவர்களுக்கு பிறந்திருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காமாட்சி தன் மகளை கணவரிடம் விட்டுவிட்டு ஜெயங்கொண்டம் பகுதியில் தனியாக வசிக்கத் தொடங்கினாள். சமீபத்தில் அவள் தன் தாய் வீட்டுக்கு மீதிக்குடிக்கு வந்திருந்தாள். காலையில் எழுந்ததும் வழக்கம் போல் வாசலில் கோலம் போட்டுக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த 64 வயது மகேந்திரன் அங்கு வந்தார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் மகேந்திரன் தன்னிடம் மறைத்து வைத்திருந்த இரும்புக் குழாயால் காமாட்சியின் தலையில் பலமாகத் தாக்கினார். தொடர்ச்சியாக அடிகள் விழுந்ததால் வலியால் துடித்த காமாட்சி கதறினாள். அந்தச் சத்தத்தைக் கேட்டு உள்ளே இருந்து ஓடி வந்தார் அவளது தந்தை பாண்டுரங்கன். அவரையும் மகேந்திரன் தடுக்க முயன்றபோது தாக்கி...