Posts

Showing posts with the label family death

காருக்குள் கருகிய 4 உடல்கள் தாயை கட்டிப்பிடித்த நிலையில் மகள்-மகன்! கொடூர மரணத்தில் மர்மம்!

Image
நெல்லை மாவட்டத்தில் கார் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் உயிரிழந்துள்ள சோக சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ச் 17, 2026 செவ்வாய்க்கிழமை காலை, திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே, ஆத்தங்கரை பள்ளிவாசல் செல்லும் சாலையில், பிரதான பாதையிலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில், இரண்டு பனைமரங்களுக்கு இடையே ஒரு கார் முற்றிலும் எரிந்த நிலையில் காணப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த வள்ளையூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காருக்குள் நான்கு சடலங்கள் மிகவும் எரிந்து, அடையாளம் தெரியாத அளவுக்கு கருகிய நிலையில் இருந்தன. சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தடய அறிவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரசன்னகுமார் தலைமையில் துப்பரியும் நாய் பிரிவு உள்ளிட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். காரின் இன்ஜின் எண் மற்றும் பதிவு எண் மூலம் விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர்கள் சென்னை நந்தம்பாக...