Posts

Showing posts with the label input costs

“தமிழ்நாட்டில் ஜனவரிக்கு மேல சிக்கனுக்கு ஜிங்குச்சா தான்” என்ன காரணம் தெரியுமா?

Image
சென்னை, டிசம்பர் 29, 2025 : தமிழ்நாட்டில் பிராய்லர் கோழி வளர்ப்பு விவசாயிகள், வளர்ப்புக் கூலி உயர்வு கோரிக்கையை நிறைவேற்றாததால், 2026 ஜனவரி 1 முதல் உற்பத்தியை நிறுத்தி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இதனால், மாநிலத்தில் கோழி இறைச்சி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை கடும் உயர்வு அடையும் அபாயம் உருவாகியுள்ளது. அசைவ உணவு பிரியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, இந்தியாவிலேயே பிராய்லர் கோழி உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் மாநிலமாகும். குறிப்பாக, திருப்பூர் மாவட்டத்தின் பல்லடம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான கோழிப்பண்ணைகள் செயல்படுகின்றன. இங்கு விவசாயிகள், பிராய்லர் நிறுவனங்களிடமிருந்து கோழிக்குஞ்சுகளைப் பெற்று, 42 நாட்களுக்குள் வளர்த்து விற்பனைக்கு தயாராக்கி வழங்குகின்றனர். தற்போது, ஒரு கிலோ உயிருள்ள கோழிக்கு வெறும் 6.50 ரூபாய் மட்டுமே கூலியாக வழங்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். கடந்த ஐந்து ஆண்டுகளாக இந்தக் கூலி உயர்த்தப்படவில்லை. அதேநேரம், மின்கட்டண உயர்வு, தீவனப் பொருட்கள் (சோயா, மக்காச்சோளம் போன்றவை) விலை பன்மடங்கு உயர்வு, மருந்து...