மனைவியின் தோழி என நினைத்த கணவன்.. வீட்டின் பின் கிடந்த ஆணுறை.. ரகசிய கேமராவில் சிக்கிய பகீர் உண்மை..
இந்தூர் (மத்தியப் பிரதேசம்) : மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று பலரையும் திடுக்கிட வைத்துள்ளது. நகை அடகுக் கடை உரிமையாளரான ராகேஷ் படேல் (வயது 35) என்பவரை 2022-இல் திருமணம் செய்து கொண்ட 22 வயது இளம்பெண் பிரியா படேல், திருமணத்திற்குப் பின் சில மாதங்களிலேயே தனிக் குடித்தனம் போக விரும்பினார். இதற்கு பிரியாவே முக்கிய காரணமாக இருந்தார். தனி வீட்டிற்கு சென்ற பிறகு அவர்களது வாழ்க்கை சுமூகமாக சென்று கொண்டிருந்தது. கடந்த ஜூன் மாதம், பிரியா தனது கணவரிடம், "எனது கல்லூரி தோழி வேலை விஷயமாக இந்தூருக்கு வந்துள்ளார். வெளியே தங்கினால் பாதுகாப்பு இல்லை என்பதால் நம் வீட்டில் தங்க அனுமதி கேட்கிறேன்" என்று கூறினார். ராகேஷும் எந்த ஆட்சேபனையும் இன்றி அனுமதித்தார். அதன்படி, புர்கா அணிந்து முகம் தெரியாத அளவுக்கு ஒரு 'தோழி' வீட்டுக்கு வந்தார். சிறிது நேரம் பேசிய பின், ஓய்வு எடுக்க படுக்கை அறைக்கு சென்றார். இந்த 'தோழி' சுமார் இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தங்கினார். காலையில் 'வேலைக்கு' செல்வது போல வெளியே போவார், இரவில் திரும்பி வருவார். பின்னர் ஹாஸ்டலு...