Posts

Showing posts with the label Lingaa

திருமணமான 6 நாளில் கர்ப்பம்.. ரசிகர்களை அதிர வைத்த ரஜினி பட ஹீரோயினி..

Image
பாலிவுட்டின் புதுமணத் தம்பதிகளான சோனாக்ஷி சின்ஹா மற்றும் ஜாகிர் இக்பால், திருமணமான ஒரு வாரத்தில் மும்பை கோகிலாபென் மருத்துவமனையில் காணப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி, கர்ப்ப வதந்திகளைத் தூண்டியுள்ளது. தமிழில் ‘லிங்கா’ படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து ரசிகர்களுக்கு பரிச்சயமான சோனாக்ஷி, கடந்த ஜூன் 23, 2024 அன்று ஏழு வருட காதலரான ஜாகிர் இக்பாலை மணந்தார். இவர்களின் எளிமையான திருமணம் பாலிவுட்டில் பேசுபொருளானது. ஆனால், திருமணத்திற்கு பிறகு மருத்துவமனைக்கு சென்ற வீடியோவால், “சோனாக்ஷி கர்ப்பமாக இருக்கிறாரா?” என்ற கேள்வி எழுந்துள்ளது.இந்த வதந்திகள் இணையத்தில் பரவ, சோனாக்ஷி இதற்கு நகைச்சுவையுடன் பதிலளித்தார்.  “நான் கர்ப்பமாக இல்லை, கொஞ்சம் எடை போட்டிருக்கேன்,” என்று ‘Curly Tales’ நேர்காணலில் கூறி, “இப்போ மருத்துவமனைக்கு போனாலே கர்ப்பம் என்று நினைக்கிறார்கள்,” என சிரித்தார். உண்மையில், அவர்கள் மருத்துவமனைக்கு சென்றது சோனாக்ஷியின் தந்தை, நடிகர் சத்ருகன் சின்ஹாவின் காய்ச்சல் சிகிச்சைக்காகத்தான் என்று தெரியவந்தது. சத்ருகனின் மகன் லவ் சின்ஹா, “அப்பாவுக்கு காய்ச்சல், வழக்கமான பரிசோதனைக்காக...