தாயின் அசிங்கத்தை பார்த்த பிஞ்சு குழந்தைகள்.. விசாரணையில் வெளியான கொடூரம்..!
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள மொடச்சூர் பகுதியில், கள்ளக்காதலுக்காக தனது இரண்டு சிறு குழந்தைகளை (7 வயது மகன் மற்றும் 4 வயது மகள்) ஈவு இரக்கமின்றி தாக்கிய தாயின் செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தில் முக்கிய பிரதானி, அதே பகுதியைச் சேர்ந்த அம்மு குட்டி (வயது தெரியவில்லை). இவரது கணவர் சந்தோஷ் (30), தனியார் பேருந்தில் நடத்துநராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 7 வயது மகிலேஷ் என்ற மகனும், 4 வயது ஸ்ரீநிதி என்ற மகளும் உள்ளனர். சந்தோஷ் பகல் முழுவதும் வேலை காரணமாக வீட்டுக்கு வராத நிலையில், அம்மு குட்டி குழந்தைகளுடன் வீட்டில் தனியாக இருந்து வந்தார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபருடன் அம்மு குட்டிக்கு நெருக்கமான பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் பின்னர் திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவாக மாறியது. அம்மு குட்டி, கணவர் வேலைக்கு சென்ற பிறகு தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி, சந்தோஷ் வழக்கம் போல் வேலைக்கு சென்றிருந்த நேரத்தில், அம்மு குட்டி தனது கள்ளக்காதலனை வீட்டுக்கு வரவழைத்தார்....