Posts

Showing posts with the label Kapil Sibal

BREAKING : மொத்தமாக திருப்பி போட்ட செந்தில் பாலாஜி வழக்கு!

Image
சென்னை, அக்டோபர் 6: தமிழக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டில் பதிவான வழக்குகள் தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில் முக்கிய அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. வழக்கு விரைவாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று மனுக்களை நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெயமால்யா பாக்சி அமர்வு விசாரித்தது. இதில், ஜாமீன் நிபந்தனைகளில் தளர்வு கோரிய மனுவை நீதிமன்றம் ஏற்கவில்லை. இந்த வழக்கின் பின்னணியில், 2013-இல் அதிமுக ஆட்சியின் போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் பெற்றதாக செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதன் அடிப்படையில், அமலாக்கத்துறை (ED) பண பரிவர்த்தனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. 2023 ஜூன் 14 அன்று அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டு கைது செய்யப்பட்டதால், செந்தில் பாலாஜி அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். நிபந்தனைகளுடன் ஜாமீன் பெற்ற அவர், தற்போது வேலூர் பணம் திருட்டு வழக்கில் முக்கிய குற்றவாளிகளுக்கு எதிரான வழக்கை...