Posts

Showing posts with the label emotional message

எவனுடைய அனுமதியும் தேவையில்லை.. முடிவுக்கு வந்த காதல் அத்தியாயம்!

Image
தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகை அனுபமா பரமேஸ்வரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு உணர்ச்சிகரமான பதிவை வெளியிட்டுள்ளார். இந்தப் பதிவு ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அவர் நடிகர் துருவ் விக்ரம் உடனான உறவு முடிவுக்கு வந்துவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அனுபமா பகிர்ந்த பதிவில், “சில சமயங்களில், முடிவில்லாத பாதைகளை விட்டுவிட்டு தான் மன அமைதியை கண்டடைய முடியும். இன்று அந்த அமைதி என்னைத் தேடி வந்துவிட்டது. இன்றிலிருந்து என் குரலை தேர்ந்தெடுக்கிறேன். என் வாழ்க்கையை தேர்ந்தெடுக்கிறேன். இனி எவனுடைய அனுமதியும் தேவையில்லை. பயமும் இல்லை. என்னை நானே மீண்டும் கண்டுபிடித்து, நான் கிட்டத்தட்ட மறந்துவிட்ட அந்த வாழ்க்கையுடன் காதல் கொள்ளப் போகிறேன்...” என்று நீண்ட உருக்கமான வரிகளை எழுதியுள்ளார். மேலும், “நீண்ட காலமாக சொல்ல விரும்பிய ஒன்றை இப்போது சொல்கிறேன்... நான் உங்களை அனைவரையும் நேசிக்கிறேன். எனக்காக நின்று, என்னை நம்பி, என் வாழ்க்கையை அன்பால் நிரப்பிய அனைவருக்கும் நன்றி. யூனிவர்ஸுக்கு நன்றி. இது குணமடைதலுக்கு... சுதந்திரத்துக்கு... என்னை தேர்ந்தெடுப்பத...